முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1781 |
|
விளக்கம்
திருப்பெருந்துறை ஆவுடைய பரமசுவாமி திருக்கோயிலில் தேவர் கட்டளை என்ற உச்சிக் காலக் கட்டளை சிறப்பாக நடைபெறுவதற்கு உதவியாக விளானூர், இடையூர், சிறுகனூர், பூதகுடி, கோடிக்குளம் ஆகிய கிராமங்களும் ஆவுடையார் கோயில் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புகள், நஞ்சை, புஞ்சைகள், மனை, நிலம் ஆகியவை சேது அரசர்களால் ஏற்கனவே சர்வமானய்மாக வழங்கப்பட்டிருந்தன. இந்தக் கிராமங்களிலிருந்து மன்னருக்குச் செலுத்த வேண்டிய சுங்கம் மகமை, காடுகாவல்வரி, உள்ளுர் வரி, சாணார் வரி, இடங்கை வரி, வலங்கை வரி உட்பட்ட பதினெட்டு வகை வரிகளை திருவாவடுதுறை ஆதின கர்த்தர் வசூலித்துக் கொள்ள இந்தச் செப்பேட்டில் ஆணை வழங்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 89 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |