திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1659 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 40 செ.மீ x 9 செ.மீ |
|
விளக்கம்
திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் திருவாவடுதுறை அம்பலவாண பண்டாரத்திற்கு அளித்த நிலக்கொடையை இச்செப்பேடு கூறுகிறது. திருவாவடுதுறை திருக்கோயிலில் சிதம்பர ஈசுவரர் சுவாமி சன்னதியில் நாள்தோறும் மயேசுர பூஜை நடத்தி வைப்பதற்கு ஏதுவாக மன்னர் மடப்புரமாக நிலக்கொடை வழங்கியுள்ளார். இராமநாதபுரம் மன்னரது சீமையின் பதினேழு மாகாணங்களில் ஒன்றான குத்தகை நாடு என வழங்கப்பட்ட அனுமந்தக்குடி மாகாணத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இது முந்தைய பாண்டி நாட்டு மிழலைக் கூற்றத்தின் தென்மேற்குப் பகுதியாகும். சேதுபதி மன்னர் இந்தச் செப்பேட்டை நிறைவு செய்து கையெழுத்திட்ட பின்னர், இந்த தருமத்திற்கு வழங்கப்பட்ட கிராமங்களில் நாணக்குடிக்குப் பதில் நாட்டிசேரியை வழங்குதல் நல்லது என் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அந்த மாற்றத்தை மீண்டும் இதே செப்பேட்டில் தொடர்ந்து பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 82 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |