குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 10.11.1733 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 25.3செ.மீ x 17.7 செ.மீ |
|
விளக்கம்
சைவ சமயத்தின் சிறப்பான பீடமாக விளங்கிய சோழ நாட்டு திருவாவடுதுறை மடத்தின் பால் சேதுபதிகள் அனைவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மடத்தின் பராமரிப்பில் உள்ள திருப்பெருந்துறை ஆவுடையார் திருக்கோயிலுக்கும் மடத்திற்கும் பல ஊர்களைச் சர்வமானியமாக வழங்கியுள்ளனர். குமார முத்து விசையரெகுநாத சேதுபதி மன்னர் ஏற்கெனவே பொசுக்குடியினை மரப்புரமாக வழங்கியிருந்தும், அந்தத் திருமடத்தின் மயேச்சுரர் பூசைக்காக திருப்பாக்கோட்டை என்ற ஊரினைத் தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. சேதுபதிச் சீமையின் எட்டு மாகாணங்களிலும் உள்ள சுங்கத்துறையில் பொதி ஒன்றுக்கு மாகாணிப் பணமும் பெரிய ஊர்களில் அரைமாகாணிப் பணமும், சந்தைப் பேட்டையிலும் இதர இடங்களிலும் கடையொன்றுக்கு மாதம் அரைக்கால் பணமும் மகமை பெற்றுக் கொள்ள பண்டார சன்னதிக்கு இந்தச் செப்பேட்டில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தானிய விளைநிலம், மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் இவற்றிலும் ஒரு குறிப்பிட்ட மகமையைப் பெற்றுக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Dec 2017 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |