முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 15.11.1781 |
|
விளக்கம்
அனுமனேரி என்ற முத்துராமலிங்கபுரம் குளத்தூரான் குமாரன் சுப்பையன் 1.கஸ்தூரி ஐயன் குமாரன் லட்சுமி நாராயணன், 2. லட்சுமண ஐயன் குமாரன் சின்ன சுப்பையன் 3. அய்யாவய்யன் குமாரன் திருவேங்கடநாதன் 4. வீரராகவய்யன் குமாரன் சுப்பய்யன் 5. ஐயங்கார் குமாரன் சீனிவாசகன் 6. அழகய்யன் குமாரன் முத்தய்யன் 7. சேனாதிபதி சாத்திரியார் குமாரன் வேதாந்தமய்யன் 8. நரசிங்கய்யன் குமாரன் ராமசிங்கய்யன் 9. நாரண வாத்தியார் குமாரன் வெங்கிடசுப்பையன் ஆகிய பத்து அந்தணர்களுக்கு சேதுபதி மன்னர் தான பூருவமாக வழங்கியதை இந்தச் செப்பேடு சொல்கிறது. இந்த நிலக்கொடை பெற்ற பதின்மரும் வேதவிற்பன்னர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய ஒன்பதின்மரும் சிவப்பிராமணர்கள். இவர்களுக்கு தானம் வழங்கப்பட்ட ஊர்ப்பகுதிக்கு நான்கு எல்லைகள் விளக்கமாக இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 61 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |