Back
செப்பேடு
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி
வரலாற்று ஆண்டு 13.1.1712
அளவுகள் / பரிமாணங்கள் 24 செ.மீ x 17.5 செ.மீ
விளக்கம்

          முதலாம் சரபோசி (1711-1729) ஆட்சிக்காலத்தில் அய்யாவய்யன் அவர்கள் சுபாவில் திருவாரூர்ச் சீமையைச் சேர்ந்த நாகப்பட்டினம் பற்கணாவுக்குள் வாழும் அந்தணர்களும், நாட்டாரும், குடியானவர்களும் கூடித் திருவாவடுதுறை ஆதீனம் பண்டார சன்னிதி அவர்களுக்கு மகமைக் கொடை அளித்த விபரம் இச்செப்பேட்டில் எழுதப்பெற்றுள்ளது.

          கடப்பு, கார், சம்பா, பசானம், சித்திரைக் கடப்பு ஆகிய விளைச்சலின் முதலுக்குச் சர்க்காருக்குக் கொடுக்கும் பொதுவில் கல நெல்லுக்கு உரி ஆகக் கோட்டை 1க்கு நாழி நெல் வீதம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களுக்குக் கொடுத்து வர ஒப்புக்கொண்டு செப்பேடு வெட்டித் தந்தனர். இந்த நெல்லைக் கொண்டு எப்பொழுதும் பரம்பரை பரம்பரையாக மகேசுவர பூசை, அன்னதானம் முதலிய அறச்செயல் நடைபெற வேண்டுமென்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_CPS_00179_திருவாவ...

  • TVA_CPS_00179_திருவாவ...

  • TVA_CPS_00179_திருவாவ...

  • TVA_CPS_00179_திருவாவ...

  • TVA_CPS_00179_திருவாவ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 26 Dec 2017
பார்வைகள் 85
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு