திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / முதலாம் துளசா |
| வரலாற்று ஆண்டு | 13.4.1729 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 41 செ.மீ x 17 செ.மீ |
|
விளக்கம்
இராசராச வளநாடு, இராசேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர்க் கூற்றத்தில் சிறுநெல்லிக் கோட்டையில் இருக்கும் காணியுடைய அரையர்களில் சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர் மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர் தஞ்சை மராட்டியர் காலத்திலிருந்த பாளையக்காரருள் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சிங்கவனம் என்ற பாளையத்துக்கு உரியவர்கள். அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
9 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 26 Dec 2017 |
| பார்வைகள் | 137 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |