திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | 12.5.1673 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 25.5. செ.மீ x 18 செ.மீ |
|
விளக்கம்
திருவாவடுதுறை ஆதினத்திடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக சேதுபதி மன்னர் ஆதினத்துக்கும் திருக்கோயிலுக்கும் பல கொடைகளை அளித்துள்ளார். இந்தச் செப்பேட்டின் மூலம் அந்தக் கோயிலில் உச்சிக்காலக் கட்டளையை நாள்தோறும் நிறைவேற்றி வைப்பதற்கும் அங்கு மடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் தச்சமல்லி ஏம்பல் என்ற கிராமத்தையும் உடலாக வழங்கியிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கொடையாக வழங்கப்பட்ட தச்சமல்லி அமரடக்கி பற்றில் பிரானூர் உட்கடையில் அமைந்திருந்தை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மன்னரது இந்த தர்மம்-அபிஷேகம், திருமாலை, திருவிளக்கு, திருநந்தவனம், திருமடம் ஆகியவை சிறப்பாக நடைபெறுவதற்கு திருபெருந்துறையைச் சேர்ந்த மருத பண்டாரமும் ஏக பண்டாரமும் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு காணி ஆட்சியும் கொடுக்கப்பட்டிருந்தது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 100 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |