திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1659 |
|
விளக்கம்
இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நித்ய கட்டளை மற்றும் திருவிழா சம்பந்தமாக மன்னர் வழங்கிய உரிமை ஆவணமாக இந்தச் செப்பேடு விளங்குகிறது. “காணியாட்சியாக சேத்திரமாக சுவாத்தியமாக பூசாரிக்கு கொடுத்தது“ எனச் சொல்லுகிறது. இந்தச் செப்பேட்டில் ஆலயத்தின் பூசாரி பெயர் குறிக்கப்படாததால், அந்தப் பணி பரம்பரை பாத்ய மற்றதும் அப்பொழுதைக்கப்பொழுது மன்னரால் நியமனம் செய்யப்படத்தக்கது என்பதும் தெரிகிறது. மேலும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், நைவேதனம், திருமாலை, திருவிளக்கு, பரிவட்டம், சோடச உபச்சாரம் ஆகியவை நாள்தோறும் நடைபெற்று வந்ததும் அதற்காக குடிமக்களிடமிருந்தும் அரண்மனையில் இருந்தும் பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டதும் தெரியவருகிறது. மேலும் உப்பு முதல் கர்ப்பூரம் வரை பட்டணத்திலே விற்கப்படுகிற அனைத்துப் பொருட்களிலும் ஒரு பிடி அளவுப் பொருளை வலியப் பெறுவதற்கும், மன்னரது களஞ்சியத்தில் இருந்து கொடுக்கப்படுகிற செலவு நெல்லில் ஒரு கலத்திற்கு ஒரு படி நெல்லும், அரண்மனை சேமிப்பில் (உக்கிராணம்) இருந்து நாள்தோறும் இரண்டு படி அரிசியும், ஒரு கோழியும், அஞ்சு முட்டையும் திங்கட்கிழமை தோறும் ஒரு கிடாயும் பெற்றுக் கொள்வதற்கும் இந்தச் செப்பேட்டில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |