Back
செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
வரலாற்று ஆண்டு கி.பி.1658
விளக்கம்

          திருமலை ரகுநாத சேதுபதி மன்னரால் இராமேசுவரம் சங்கர குருக்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஆலய வழிபாட்டில் உரிமைகள் தொடர்பாக இச்செப்பேடு வழங்கப்பட்டுள்ளது.

          இந்தச் செப்பேடு வழங்கப்பெற்ற பதினேழாம் நூற்றாண்டில் இராமேசுவரம் திருக்கோயிலின் அன்றாட திருப்பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அந்தணர்கள். அவர்கள் கோயிலில் பூசை, சுயம்பாகம், பரிகாரம் ஆகிய பணிகளைச் செய்து வந்தனர்.

          அவர்களில் முக்கியமானவர் சங்கர குருக்கள். இவருக்கும் ஏனைய மராட்டகாள குருமார்களுக்கும் அவர்களது பணிக்கான ஊதியம் எதுவும் வழங்காததாலும் திருமலை சேதுபதி மன்னர் இராமேசுவரம், சேது ஸ்நானம், சுவாமி தரிசனம் ஆகியவைகளுக்காக வருகின்ற மராட்டிரர்களுக்கும், இன்னும் சகலப் பிரிவினர்களுக்கும், தீர்த்தம், புரோகிதம் செய்து வைத்து அதில் கிடைக்கும் வருவாய்களை அனுபவித்துக் கொள்வதுடன் அவர்கள் திருக்கோயில் பணிகளையும் செய்து கொள்ளும் உரிமையினை மன்னர் இந்தச் செப்பேட்டின் மூலம் சங்கரகுருக்களுக்கு வழங்கி உத்திரவிட்டுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 12-1.jpg

  • 12-2.jpg

  • 12-3.jpg

  • 12-4.jpg

  • 12-5.jpg

  • 12-6.jpg

  • 12-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 82
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு