சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 7.6.1742 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 18.7 செ.மீ x 15.5 செ.மீ |
|
விளக்கம்
திருஉத்தரகோசமங்கையின் இறைவர் மங்கைநாத சுவாமி சன்னதியில் சங்கரலிங்க சுவாமிக்கு அபிஷேகம், நைவேத்தியம், திருமாலை, திருவிளக்கு ஆகிய திருக்கைங்கரியங்கள் நடத்துவதற்காக பாலையாறு ஏந்தல் என்ற கிராமத்தை தர்மமாக விட்டுக் கொடுத்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மேலும் இறைவியின் சுக்கரவாரக் கட்டளை திருநந்தா விளக்கு, நந்தவனம், அம்மன் எழுந்தருளப்பண்ணல் ஆகியவைகளுக்கு தேரிருவேலி கிராமத்தில் உள்ள காவல்காணியான வீசு கொண்ட தேவன், காவல் நஞ்சை பத்தொன்பது மாநிலமும், புஞ்சை திட்டு நிலங்களையும், சர்வமானியமாக கட்டளையிட்டுள்ள விவரமும் தெரியவருகிறது. அத்துடன் தேரிருவேலி கிராமத்து காவல்க் குடியான துலுக்கர் நெசவாளிகளாக இருந்தவர்கள் என்பதும், அவர்களது தறிக்கடமையும், அதில் உண்டாகிய காவல் சுதந்திரப் பணமும் கோயிலுக்குரியதாகக் கட்டளையிடப்பட்டதாகவும் இந்தச் செப்பேடு தெரியப்படுத்துகின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |