பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | பொம்மையக் கவுண்டன் பட்டி |
| ஊர் | பொம்மையக் கவுண்டன் பட்டி |
| வட்டம் | திண்டுக்கல் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 24.7.1614 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 23.5 செ.மீ. நீளம், 15.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
அல்லியம்மாள் என்பவரால் அல்லிநகரம் என்ற ஊர் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஊரில் முதலில் குடியேறியவர் யார்? நாட்டாண்மை யாருக்கு? என்ற சச்சரவு பொம்மையக் கவுண்டன் மகன் சின்னாக்கவுண்டனுக்கும், பாப்பயக் கவுண்டன் என்ற மற்றொருவனுக்கும் ஏற்பட்டது. இவர்களது பிணக்கைப் பாளையக்காரர்கள் தீர்க்க முன்வரவில்லை. அப்போது திருமலை நாயக்கர் அன்னஞ்சி பாளையப்பட்டிற்கு வந்திருந்த செய்தியை ஊரார் கூற, பொம்மையக் கவுண்டன் மகன் சின்னாக்கவுண்டன் திருமலை நாயக்கரைப் பாதகாணிக்கைப் பொன், அரிசி, பருப்பு, நெய், காய்கறிகளுடன் வணங்கி நியாயம் வழங்க வேண்டினான். திருமலை நாயக்கர் பாளையப்பட்டுகளைக் கலந்து ஆலோசித்துத் தவறு பாப்பயக்கவுண்டன் பேரில் உள்ளது என்று தீர்ப்புக் கூறி, சின்னாக்கவுண்டனுக்கு நாட்டாண்மைப் பதவி வழங்கினார். இச்செய்தியை இச்செப்பேடு அளிக்கிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 75 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |