Back
செப்பேடு
அபிநவமங்கலம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் அபிநவமங்கலம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் அபிநவமங்கலம்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தெலுங்கு
அரசு/ஆட்சியாளர் துறையூர்ப் பாளையக்காரர் / வெங்கடாசல ரெட்டியார்
வரலாற்று ஆண்டு 21.1.1745
அளவுகள் / பரிமாணங்கள் 23 செ.மீ X 17.5 செ.மீ
விளக்கம்

          அழகிய கைப்பிடியின் கீழ் மையமாக அழகிய சிவலிங்கம் வரையப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ்ச் சிவலிங்கம் நன்கு வரையப்பட்டுள்ளது. இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு ஒரு மண்டபத்தில் உள்ளது போல் சிவலிங்கம் காணப்படுகிறது.

          சிவலிங்கத்தின் இருபுறமும் சூரிய சந்திரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சிவலிங்கம் இராமநாதன் ஆகிய இராமலிங்கம் ஆகும். இராமன் பிரதிட்டை செய்ததாக ஐதீகம். தேவி மலைவளர் காதலி (பர்வத வர்த்தினி) நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் உள்ளார். இருகரங்கள் மலர்களைத் தாங்கியும் இருகரங்கள் அபயம் - வரதம் நிலையிலும் உள்ளன. எதிரில் அழகியநிலையில் நந்திதேவர் வரையப்பட்டுள்ளார். நந்தியின் பின்புறம் கொடிமரம் வரையப்பட்டுள்ளது. வரைகோட்டு ஒவியத்தில் சிற்பி இராமேசுவரம் கோயில் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார்.

         துறையூர்ப் பாளையங்காரர் வெங்கடாசல ரெட்டியார் அவர்கள் இராமேசுவர அன்னதான தர்மத்திற்கு அபிநவமங்கலம் என்ற ஊரைச் சர்வமானியமாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. இராமேசுவரத்தில் இருந்த கிரி தனுஷ்கோடி சாஸ்திரி வசம் இக்கொடை அளிக்கப்பட்டது. இச்செப்பேட்டை துறையூர்ப் பாளைய இராயசம் ராமலிங்கய்யா எழுதியுள்ளார். இறுதியில் பாளையக்காரர் கையொப்பமிட்டுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
அபிநவமங்கலம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00155_அபிநவமங...

  • TVA_CPS_00155_அபிநவமங...

  • TVA_CPS_00155_அபிநவமங...

  • TVA_CPS_00155_அபிநவமங...

  • TVA_CPS_00155_அபிநவமங...

  • TVA_CPS_00155_அபிநவமங...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 122
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு