ஆழ்வார்பேட்டை செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ஆழ்வார்பேட்டை செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | ஆழ்வார்பேட்டை |
| ஊர் | சென்னை |
| வட்டம் | சென்னை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1733 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 33 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
செப்பேட்டில் முள்ளிநாடு, பாபநாசம் ஆகியவை குறிக்கப்படுகின்றன. முள்ளிநாடு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியாகும்.பாபநாசம் அங்கு உள்ள நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற இடமாகும். கொல்லம் ஆண்டு குறிப்பிடும் மரபு தென்பாண்டி நாட்டு மரபாகும். பாபநாசம் இறைவன் முன்பாக நாலு திசையைச் சேர்ந்த நாகபாசத்தூர் ஆகிய பஞ்சவாத்யக்கார்கள் அனைவரும் கூடி வழிபடவந்தோர், தலத்தார், ஸ்தானத்தார், தலைவர்கள் முன்னிலையில் அத்தாளநல்லூரைச் சேர்ந்த மாதவன் பிள்ளை மகன் வீரபத்ர வினோதியார்க்கு “நாகபாசநரலங்கராயன்“ என்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்துள்ளனர். பெரரிய ஊர்களில் உள்ள நாகபாசத்தார் வருடந்தோறும் பத்து பணமும், சிறிய ஊர்களில் உள்ளோர் ஐந்து பணமும் தங்களிடையே நிகழும் கலியாணங்களுக்கு ஒரு பணமும் பிற சில சலுகைகளும் கொடுப்பதாக முடிவு செய்து இச்செப்புப் பட்டயம் பாபநாசம் இறைவன் சன்னதியில் எழுதிக் கொடுத்துள்ளனர். பஞ்சமா சப்த்தமான கருவிகளின் பெயர்கள் இச்செப்பேட்டில் குறிக்கப்படுகின்றன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 78 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |