செப்பேடு
மங்கலரேவுச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் மங்கலரேவுச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் மங்கலரேவு
ஊர் மங்கலரேவு
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 29.7.1615 அல்லது 26.7.1675
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
விளக்கம்

சிந்துரெட்டி என்பவர் தனது கிராமமான சின்னாரெட்டிப்பட்டியை விற்பதற்கு முனைந்தார். சோலப்பரெட்டி என்பவர் அதை வாங்க முன் வந்தார். சிந்துரெட்டி சோலப்ப ரெட்டியைக் குரவரெட்டி என்று இகழ்ந்துபேசி விலைக்குக் கொடுக்க மறுத்து விட்டார். இகழப்பட்ட சோலப்பரெட்டி நன்மறம் என்ற ஊருக்குத் திருமலை நாயக்க வந்தபோது அவரிடம் முறையிட்டார். திருமலை நாயக்கர் முத்துலிங்க தும்பிச்சினாக்கரை கலந்து நியாயமறிந்து இகழ்ச்சி பேசின சிந்துரெட்டியிடமிருந்து ஊரைப் பறிமுதல் செய்து சோலப்ப ரெட்டிக்கு கொடுத்ததையும், சிந்துரெட்டிக்கு அன்றாட வாழ்வுச் செலவுக்காகச் சிலவற்றை மட்டும் விட்டுக் கொடுத்ததையும் இச்செப்பேடு கூறுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
மங்கலரேவுச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00013_மங்கலரே...

  • TVA_CPS_00013_மங்கலரே...

  • TVA_CPS_00013_மங்கலரே...

  • TVA_CPS_00013_மங்கலரே...

  • TVA_CPS_00013_மங்கலரே...

  • TVA_CPS_00013_மங்கலரே...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு