தளவாய் சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 10.8.1607 |
|
விளக்கம்
ஸ்ரீஇராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் உடையவர் கட்டளை பூசைக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கிறது. இந்தச் செப்பேடு, இராமேசுவரம் திருக்கோயில் “உடையவர் பூசைக்கட்டளைக்கு“ ஆப்பனூர் நாட்டில், கருங்குளம், கள்ளிக்குளம், கருசங்குளம், வேலங்குளம், பொட்டக்குளம், விடந்தை, கண்ணன் பொதுவணமூத்தான், சிறுகளம் என்ற எட்டு எந்தல்களும் அவைகளினால் நீர்பாயும் பகுதியில் உள்ள குட்டம் குளம், நஞ்சை, திட்டு, திடல் ஆகியவைகளையும் தானமாக சேதுபதி மன்னர் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இராமேசுவரம் கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில், தளவாய் சேதுபதி மன்னர் ஏற்படுத்தியுள்ள “இராமநாதசுவாமி உடையார் கட்டளை“ என்பது தான் முதல் கட்டளை. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |