வெண்பக்கோட்டை செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | வெண்பக்கோட்டை செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | வெண்பக்கோட்டை |
| ஊர் | வெண்பக்கோட்டை |
| வட்டம் | சாத்தூர் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / வீரப்ப நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி. 1574 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 35 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
மதுரை அருகிலுள்ள சிறுவாலை அச்சராமக் கவண்டர் என்பவர் வீரப்ப நாயக்கரிடம் ஆணை பெற்று குண்டாறு, தாமிரபரணி, இராமேசுவரம், தென்காசி ஆகியவற்றிற்கிடையே உள்ள கம்பளத்துக் கவண்டர்களிடம் இனவரி வசூலிக்கும் உரிமைக்கு ஆணை பெற்றார், அதனை நிறைவேற்ற தென்காசி அதிவீரராம பாண்டியர் அரசிடம் சென்று நடவடிக்கை மேற்கொண்டார். வெண்பக்கோட்டை புல்லா கவண்டர் அதிவீரராம பாண்டியன் பண்டாரத்தில் வாதாடி இனவரி இல்லாது தடுத்தார். இவரது சேவையைப் பாராட்டி மேற்சொன்ன நான்கு எல்லைகளுக்குட்பட்ட கம்பளக் கவண்டர்கள் ஒன்றுகூடி இவருக்கு வெகுமதியாக 1500 பொன்கொடுக்கத் தாங்கள் ஒவ்வொருவரும் வில்லுக்கு ஒருபணம் வீதம் வரி வசூலித்துக் கொடுப்பதாக முடிவுசெய்தனர். மேலும் தங்கள் மீது இனவரி வசூலிக்க முயன்ற அச்சராம கவண்டனை எதிரியாக அறிவித்து அவருடன் யாரும் சேரக்கூடாது என்றும் முடிவு செய்தனர். இச்செய்திகளை இச் செப்பேடு குறிப்பிடுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 88 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |