துருவாசபுரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | துருவாசபுரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்பனந்தாள் காசிமடம் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத தொண்டைமானார் |
| வரலாற்று ஆண்டு | 22.7.1732 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29 செ.மீ x 16 செ.மீ |
|
விளக்கம்
விசைய ரகுநாதத் தொண்டைமான் மன்னர் 22.7.1731 அன்று காசியில் விசுவேசுவர விசாலாட்சி அம்மன் அபிடேகம் நைவேத்தியம் அன்னதானத்துக்குத் தருமபுர திருஙானசம்பந்த பண்டார சன்னதி அவர்கள் சீடரான திருப்பனந்தாள் காசிவாசி தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் வசம் கானாட்டுப் பகுதியில் உள்ள துருவாசபுரமான துறுமான என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. துறுமாவின் எல்லைகள் கூறப்படவில்லை. துறுமாவின் வருவாயிலிருந்து துறுமாவில் உள்ள சிவபெருமான் திருமேனி நாதருக்கு மூன்றில் ஒருபங்கும், காசித் தர்மத்துக்கு மூன்றில் இரண்டு பங்கும் அவ்வூர் வருவாயில் இருந்து கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 101 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |