Back
செப்பேடு
கூத்தனூர்ச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் கூத்தனூர்ச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் கூத்தனூர்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராய பாதர் தொண்டைமானார்
வரலாற்று ஆண்டு 1.12.1800
அளவுகள் / பரிமாணங்கள் 36.5 செ.மீ x 21.5 செ.மீ
விளக்கம்

          ராசா விசைய ரெகுநாத பாதர் தொண்டைமானார் 1.12.1800 அன்று தம் ஆட்சியில் கானாட்டுப் பகுதிக்குச் சுபேதாராக விளங்கிய செங்கமலம்பிள்ளை மகன் அடப்பங்கூத்தப்பன் பெயரில் சைவர்களுக்கு முத்திநகராகத் திகழும் தலம் காசியில் செய்த சில கொடைகளை இச்செப்பேடு விளக்குகிறது. காசியில் கங்காதீரக் கரையில் சோமேசுவரக் கட்டத்தில் தர்மசாலை சத்திரம் ரூபாய் 1250 செலவில் கட்டப்பட்டது.

          காசி விசுவநாதர் விசாலாட்சியம்மன் அபிஷேகம், நைவேதனம், வில்வார்ச்சனை, திருவிளக்குக் கட்டளைகள் நாள்தோறும் 1.25 பணம் செலவில் நடத்தப்பட்டது. நாள்தோறும் ஆறுபேருக்கு அன்னதான தர்ம் நடைபெற்றுவர மூலப்பொருளாக ரூபாய் 625 அளிக்கப்பட்டது. சோமேசுரக் கட்டத்தில் கட்டப்பட்ட சத்திரத்துக்கு கொவ்வனூருக்கு உள்கடையான கூத்தனூரில் பரந்தலைவயல், புதுவயல், நன்செய், புன்செய் விடப்பட்டது. இவையனைத்தும் தருமபுரம் திருஞானசம்மந்த தேசிகர் சீடரான காசிவாசி சடையப்பத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது.

          கொடையாக அளிக்கப்பெற்ற நிலங்களுக்கு எல்லையாக வாழைக்குறிச்சி புலவன் புன்செய், வான முத்திரைக்கல், புனங்கி புன்செய், அனாதிகளர், பொன்னமராபதிப் பாதை, பூவாலைக்குடி, பள்ளன்ஊறணி, மாணிக்க நாச்சியார் ஊறணி ஆகியன கூறப்படுகின்றன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
கூத்தனூர்ச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

  • TVA_CPS_00160_கூத்தனூ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 87
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு