செப்பேடு
சந்தையூர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சந்தையூர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சந்தையூர்
ஊர் சந்தையூர்
வட்டம் பேரையூர்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / பாளையப்பட்டு நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.17-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம்
விளக்கம்

சந்தையூர் சலுப்ப பெத்தண்ண செட்டி அதிகாரம் (துரைத்தனம்) செய்து வந்தபோது அவனிடம் மாதம் 9 கலம் தானியக் கூலிக்கு வீரண்ணசேறுவை காவல்பணி செய்துவந்தான். சந்தையில் இருவருக்கும் சச்சரவு (சல்லியம்) ஏற்பட்டு வீரணன் சேர்வை சலுப் பெத்தண்ணனின் தலையை வெட்டி, ரத்தக்கைகளோடு இரவு நடுசாமத்தில் கூளப்ப நாயக்கர் முன்கொண்டு வந்து வைத்து சந்தையூரை கூளப்ப நாயக்கரின் பாளையப்பட்டு ஊராக்கினான். கூளப்ப நாயக்கரும், ராணுவமும் மகிழ்ந்து அவனுக்கு சத்தையூரைச் சேர்ந்த 18 பட்டி காவல் நாட்டாண்மை அளித்தனர். அவனது சாதி கம்பளக்காறனாகவும். தென்மலை குத்தகை சாதிக் கம்பளக்காறனாகவும் அங்கீகரித்து பட்டயம் எழுதிக் கொடுத்தனர். கூளப்ப நாயக்கர் பாளையப்பட்டு ஏரிகள் (கண்மாய்) பாசனத்தில் 30 கலம் விதைப்பாடு நஞ்சை நிலமும் 60 சங்கிலி புஞ்சை நிலமும் தரப்பட்டது. 18 பட்டி கிராமத்து வீடுகள் ஒவ்வொன்றும் 1 பணம், 3 குறுணி தானியம் தருவதென்றும், ஆடு உள்ளவர்கள் 1 கிடாய் தருவதென்றும், அரண்மனைக்கு அடுத்து இரண்டாவதாக, இவனுக்கு கோயில்களில் தீர்த்தம் திருமாலை தருவதென்றும் முடிவாயிற்று. சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஒம்படைக்கிளவியில் சதிரகிரி சிவன், பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சந்தையூர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • Sandhaiyur - 1.jpg

  • Sandhaiyur - 2.jpg

  • Sandhaiyur - 3.jpg

  • Sandhaiyur - 4.jpg

  • Sandhaiyur - 5.jpg

  • Sandhaiyur - 6.jpg

  • Sandhaiyur - 7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 100
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு