Back
செப்பேடு
தேரூர் வில்லிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் தேரூர் வில்லிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் தேரூர் வில்லி
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் வடமொழி-கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் நாஞ்சில் நாடு / கீழ்ப்பேரூர் மன்னர் வீர ரவிபால மார்த்தாண்ட வர்மராய சிறவாய் மூத்தவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1734
விளக்கம்

          நாஞ்சில் நாட்டுச் கீழ்ப்பேரூர் மன்னர் வீர ரவிபால மார்த்தாண்ட வர்மராய சிறவாய் மூத்தவர் 1734 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தலைவர் அவர்கட்கு தேரூர் வில்லிகள் பற்றில் நிலம் அளித்த செய்தியை மிகவும் விரிவாக இச்செப்பேடு கூறுகிறது.

          நில அளவைகளும், அந்நிலத்திற்குரிய விதை அளவுகளும் அதன் வருவாயிலிருந்து பெறவேண்டிய நெல், பொன் போன்ற அளவுகளும் பல குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் நாட்டில் மடம் ஏற்படுத்திய செய்திகளும் உள்ளன. சோழநாடு புனல்நாடு என்று கூறப்பட்டுள்ளது. அரசன் கற்குளத்து உடையார் விளாகத்தில் எழுந்தருளியிருக்கும்போது இக்கொடை கொடுக்கப்பட்டது

          இச்செப்பேட்டை எழுதியவன் கோட்டாறு சிற்பன் நல்ல மாடன் அணைஞ்ச பெருமாள் மார்த்தாண்டன் சிறப்புரந்தான் என்பவன். அரசன் பெயரால் மார்த்தாண்டம் புதுவூர் என்ற ஊர் ஏற்படுத்தப்பட்டது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தேரூர் வில்லிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_CPS_00168_தேரூர்வ...

  • TVA_CPS_00168_தேரூர்வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 148
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு