செப்பேடு
இளையான்குடிச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | இளையான்குடிச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இளையான்குடி |
| ஊர் | இளையான்குடி |
| வட்டம் | இளையான்குடி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / விசையரெகுநாத பெரிய உடையார் தேவர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1733 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 28.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
சேதுபதி இளையான்குடியில் உள்ள இராசேந்திர சோழீஸ்வரர் மற்றும் மண்ணுள் மகிந்த ஈஸ்வரர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு மற்றும் திருவமுது படையல் ஆகியவை நடத்துவதற்காக ஆதிசைவரும், காசிபகோத்திரம், போதாயன சூத்திரம் சார்ந்தவருமான சுப்பிரமணிய நம்பியார் என்பவர்க்கு திருவுடையாபுரம் என்ற கிராமம் சர்வமான்யமாகக் கொடுத்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. திருவுடையாபுரம் கிராமத்தின் எல்லைகளும் அதன் நாட்டுப் பிரிவும் சொல்லப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2017
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 177 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |