அம்மையநாயக்கனூர்ச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | அம்மையநாயக்கனூர்ச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | அம்மையநாயக்கனூர் |
| ஊர் | அம்மையநாயக்கனூர் |
| வட்டம் | திண்டுக்கல் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 24.1.1629 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 28 செ.மீ. நீளம் 18 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கர் ஒருசமயம் அவசரமாகத் திருச்சிக்குச் சென்று மூன்று தினங்களில் மதுரை திரும்ப வேண்டியிருந்தது. வழக்கமாகப் பல்லக்குத் தூக்குபவர்களைக் கேட்க அவர்கள் தங்களது சனங்கள் சேகரமாக இல்லை. எனவே அம்மையநாயக்கனூர் பாளையப்பட்டுப் பல்லக்குத்தூக்கிகள் வந்துள்ளார்கள். அவர்களால் முடியும் என்று சொன்னார்கள். அவர்களைக் கேட்க அவர்கள் தூக்கிச் செல்வதாக ஒப்புக்கொண்டு மூன்று தினங்களில் மதுரையிலிருந்து திருச்சிக்குத் தூக்கிச் சென்று திரும்பினார்கள். அரசன் மகிழ்ந்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தான். ஆனால் அவர்கள், நிலம் பிற்காலத்தில் தங்களிடம் தங்காது என்று கூறி தங்களுக்குக் குறிப்பிட்ட பகுதி நீர்நிலைகளில் மீன்பிடிக்க உரிமை பெற்றுக் கொண்டனர். அந்த உரிமையைக் குறிப்பதே இந்தச் செப்பேடாகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Sep 2017 |
| பார்வைகள் | 120 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 11 |