Back
செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 10.11.1733
அளவுகள் / பரிமாணங்கள் 32.5 செ.மீ x 18 செ.மீ
விளக்கம்

          இராமேசுவரம் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ள சபாபதி ஈசுவரருக்கு அபிஷேக நெய்வேத்தியத்திற்காக குளத்தூர் கிராமம் தானம் வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          இந்தச் செப்பேட்டினால் வழங்கப்படும் ஊரை சபாபதி அம்பலத்திற்கென தனியான கட்டளை எதுவும் அந்த திருக்கோயிலில் இல்லாது இருந்த குறையை உணர்ந்து மன்னர் இந்த தானத்தின் மூலம் நிறைவு செய்துள்ளார். இந்தக் கட்டளைக்கு குளத்தூர் கிராமம் முழுமையாக வழங்கப்பட்ட போதிலும் இராமேசுவரம் நகரில் உள்ள சின்னையர் தோப்பும் புன்னைத் தோப்பும் இந்தக் கட்டளைக்காக கூடுதலாக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இராமேசுவரம் நகருக்குள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்ற நெல் முதலிய தானியங்கள் தட்டுமுட்டு சாமான்கள் கோயில் உபயோகத்திற்காக விற்கப்படுகின்ற சாமான்கள் அளக்கப்படுபவை, எண்ணப்படுபவை ஆகிய இனங்களைச் சேர்ந்தவைகளுக்கும் அரண்மனைக்காக வசூலித்து வரப்பட்ட அள்ளுத்தீர்வை, மகமை ஆகியவைகளையும் வசூலிக்கத் தேவையில்லை என்றும் இதன் கூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

         இந்த வசூல் பணியில் சேதுராமலிங்க ஐயன் என்பவர் ஈடுபட்டிருந்தார் என்பதையும் இந்தச் செப்பேடு விளக்குகின்றது. இந்த வருவாய் அனைத்தும் சபாபதி கட்டளைக்கு சேரவேண்டும் என்ற பெரும் விருப்புடன் மன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 48-1.jpg

  • 48-2.jpg

  • 48-3.jpg

  • 48-4.jpg

  • 48-5.jpg

  • 48-6.jpg

  • 48-7.jpg

  • 48-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 63
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு