பள்ளப்பட்டி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பள்ளப்பட்டி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | பள்ளப்பட்டி |
| ஊர் | பள்ளப்பட்டி |
| வட்டம் | நிலக்கோட்டை |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அளவுகள் / பரிமாணங்கள் | 23.5 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
வேதமார்க்கத்தை நிலைநிறுத்தியவரும், ஆதிபிரம்ம சகோதரமும், வைணவ மடத் தலைவருமான ஸ்ரீவேதவியாச பட்டர் அய்யங்கார், பள்ளப்பட்டி பெரிய நாட்டாண்மை தொட்டய கவண்டனுக்கு விருதுகள் அளித்து ஆணை (திருமுகம்) வழங்கியதை இச்செப்பேடு சொல்கிறது. இதன்படி தேர்த்திருநாள், அரிபூசை, குருபூசை நாட்களில அனுமக்கொடி, கருடக்கொடி, வெள்ளப்பக்கரை டால், பஞ்சவர்ண டால், மஞ்சள் நிற டால், சுருட்டி, சூரிய பரன் ஆகிய பரிசின்னங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இச்சிறப்புகள் தொட்டயக் கவண்டர் தூளி சமயத்திற்கு நாட்டாண்மை என்பதால் தூளி சமயத்திற்கு கொடுக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். கட்டு சமயத்தார், தூளி சமயத்தார், மலைக்குடியினர் இன்னும் பிறரும் அறிய இப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 333 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |