Back
செப்பேடு
இராமநாதபுரம் மூப்பன்மார் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் மூப்பன்மார் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / மூப்பன்மார்
வரலாற்று ஆண்டு கி.பி.1691
விளக்கம்

          வேளான்தரவை வீரமூப்பன் மகன் பிள்ளை வீராயி இளமநேரியில் தன் பெற்றோருடன் வசித்த போது இளமநேரி நயினுகுட்டி சேர்வைக்காரனுடன் கள்ள உறவு கொண்டு கர்ப்பமடைந்தாள். திருமணமாகாத அவள் கர்ப்பமடைந்ததை அவளது சாதியாரும், பெற்றோரும், சகோதரர்களும் கண்டித்துக் கேட்டபோது தன் உறவினை வெளிப்படுத்தியதோடு பிறகு தன்னுயிர் மாய்த்துக் கொண்டாள். அவளது சாதிக்காரர்கள் அரசரிடம் நயினுகுட்டி மீது குற்றம் சுமத்தி நீதி கேட்டபோது குற்றம் ஏற்கப்பட்டு பதிலுக்கு பலி கொடுப்பது என முடிவாகியது. நயினுகுட்டி தங்கை உடையக்காள் பலிக்கு பலியாக நிச்சியக்கப்பட்டு வீராயி உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மற்றொரு தீமூட்டி உடையக்காளைப் பலியாக உயிரோடு ஏற்றினர். இச்சமயத்தில் வரையர்களாகி மூப்பன்மார்கள் அவளை எரிக்க வேண்டாம் என முடிவு செய்து தங்கள் சாதியில் ஒரு பிள்ளையாக ஏற்றுக்கொண்டனர்.

          சாதி பிள்ளை வழியினருக்கு கலியாணத்திற்கு 7 பணம், 50 பாக்கு, 1 குறுணி அரிசி, 1 கிடாய் குரங்கு கொடுப்பது என்றும், தாலிக்கட்டுக்கு 5 பணம், 30 பாக்கு, 3 படி அரிசி, 1 கிடாய் குரங்கு கொடுப்பது என்றும், சடங்குக்கு 3 பணம், 15 பாக்கு, 3 படி அரிசி, 1 கோழி கொடுப்பது என்றும், இதுபோல் மேலும் ஆண்டுதோறும் கொடுப்பவை, சாதியில் விவகாரம் ஏற்பட்டால் தீர்ப்பது, சேராசேர்க்கைக்கு தீர்வை, வாரிசு இல்லாமல் இறந்து போனால் சடங்கு செய்து போன்றவையும் நிர்ணயிக்கப்பட்டு இப்பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இம்முடிவுகளை கூடி எடுத்தவர்கள் வலையரில் 8 கிளையினர் ஆவர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமநாதபுரம் மூப்பன்மார் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    15 Files

  • 86-1.jpg

  • 86-2.jpg

  • 86-3.jpg

  • 86-4.jpg

  • 86-5.jpg

  • 86-6.jpg

  • 86-7.jpg

  • 86-8.jpg

  • 86-9.jpg

  • 86-10.jpg

  • 86-11.jpg

  • 86-12.jpg

  • 86-13.jpg

  • 86-14.jpg

  • 86-15.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 15

தொடர்புடைய செப்பேடு