Back
செப்பேடு
திருமக்கோட்டைச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருமக்கோட்டைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருமக்கோட்டை
ஊர் திருமக்கோட்டை
வட்டம் மன்னார்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / சரபோசி
வரலாற்று ஆண்டு கி.பி.1549
அளவுகள் / பரிமாணங்கள் 33.5 செ.மீ x 21.2 செ.மீ
விளக்கம்

          சரபோசி மன்னர் ஆட்சிக் காலத்தில் பட்டுக்கோட்டைச் சுபாவைச் சேர்ந்த மதுக்கூர்ச் சீமையில் பெரியகோட்டை மாகாணத்தில் கானு சாயபு, சிங்கராச பண்டிதர் ஆகியோர் நிருவாகம் செய்யும்போது அப்பகுதியில் உகந்தாச்சியாபிள்ளை என்பவர் அபாலுதாராக இருந்தார். அப்பெரியகோட்டை மாகாணத்துக்கு உட்பட்ட ஆவிக்கோட்டை, கழிச்சாங்கோட்டை, உலையக்கொன்றம், கணியாகுறிச்சி, சொக்கநாதநல்லூர் ஆகிய ஐந்து ஊர்களின் குடியானவர்கள், ஊர் நன்செய் புன்செய் விளைவில் கலத்துக்கு நாழி நெல் மெய்குநாத சுவாமிக்கு அளிப்பதாக எழுதித் தந்துள்ளனர்.

          மேற்கண்ட ஊர்களுக்கு முறையே, நல்லவநாடன், கலிக்கநாடன், கஞ்சமலைத் தேவர், சிதம்பரத் தேவர், குண்ணப்பதேவர், வாலாமுத்து தேவர், நல்லகுட்டித் தேவர், ஆதியப்ப தேவர், திருமலைக் கொழுந்தா பிள்ளை, குப்பத் தேவர், லெட்சுமணத் தேவர், அய்யா முதலியார் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமக்கோட்டைச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00188_திருமக்...

  • TVA_CPS_00188_திருமக்...

  • TVA_CPS_00188_திருமக்...

  • TVA_CPS_00188_திருமக்...

  • TVA_CPS_00188_திருமக்...

  • TVA_CPS_00188_திருமக்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Dec 2017
பார்வைகள் 135
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 8

தொடர்புடைய செப்பேடு