செப்பேடு
தருமத்துப்பட்டி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தருமத்துப்பட்டி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | தருமத்துப்பட்டி |
| ஊர் | தருமத்துப்பட்டி |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 29.8.1656 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22.5 செ.மீ உயரம், 15 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கர் தன்னுடைய படைகளுடன் மேற்குத் திசைக்குச் சென்று திரும்பிப் புளியங்குளம் அருகில் வந்தபோது இருளப்பகவுண்டன், புன்னைத் தேவன் இருவரும் அரசனையும் அவனது படைகளையும் இருபொழுதுகளுக்கு இறுத்தி, வேண்டிய உபசரணைகள் செய்தனர். குடிகளே இல்லாது சீரணமாயிருந்த ஊரில் உபசரித்த இருவரையும், கண்டு மகிழ்ந்து அங்கு மக்களைக் குடியமர்த்தி, ஊரமைத்து வடக்குத் தெரு, தெற்குத் தெரு என்று அவ்வூரை இரண்டாகப் பிரித்து நாட்ட்ாண்மை புரியும் உரிமையையும் இருவருக்கும் பகிர்ந்தளித்ததை இச்செப்பேடு காட்டுகின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Sep 2017 |
| பார்வைகள் | 87 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |