செப்பேடு
வடமொழிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் வடமொழிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருப்பனந்தாள்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் வடமொழி-நந்திநாகரி
அரசு/ஆட்சியாளர் விஜயநகரம் / முத்தய்ய தண்ட நாயகன்
வரலாற்று ஆண்டு 27.12.1383
அளவுகள் / பரிமாணங்கள் 21 செ.மீ X 14 செ.மீ
விளக்கம்

          27.12.1383 அன்று விசயநகர மன்னர் புக்கருடைய மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆட்சி செய்யும்போது (1377-1404) அவருடைய அமைச்சர் முத்தய்ய தண்ட நாயகன் புன்னத்தூர் என்ற ஊரை முத்தய்ய தண்ட நாயகபுரம் என்று பெயர் மாற்றி சிதம்பரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு விளக்குகிறது.

           சிதம்பரம் வியாக்ரபுரம் என்றும், நடராசர் கனகசபா நாயகர் என்றும் குறிக்கப் பெறுகிறார். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வணங்கிய காரணத்தால் சிதம்பரம் வியாக்ரபுரம் எனப்பட்டது. தமிழில் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப் பெறும் இச்செப்பேட்டில் முத்தய்ய தண்ட நாயகன் பற்றிய புகழ்மொழிகள் பல கூறப்பட்டுள்ளன.

          புனிதக் துங்கபத்திரைக் கரையும் விருப்பாட்சனின் புகழும் கூறப்பட்டுள்ளன. கிரியா சக்தியின் பெருமைகள் பலபடக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்த விசயநகரக் காலச் செப்பேடு இன்னும் விசயநகர வரலாற்றில் குறிக்கப் பெறவில்லை.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வடமொழிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_CPS_00174_கிரந்தம...

  • TVA_CPS_00174_கிரந்தம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 129
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு