புதுக்குளம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | புதுக்குளம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | புதுக்குளம் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| வரலாற்று ஆண்டு | 2.5.1796 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 32 செ.மீ X 21 செ.மீ |
|
விளக்கம்
கைப்பிடியில் ஸ்ரீராமஜெயம் என்ற பொறிப்புடன் சிறிய அளவில் முத்தலைச் சூலமும் சிவலிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. கைப்பிடியின் தலைப்பில் சிறு பிள்ளையார் சுழி உள்ளது. சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் காசித் தலத்தில் விசுவநாதர் - விசாலாட்சி அம்மைக்கு அபிடேகம், நெய்வேத்யம், சத்திரம், அன்னதானம் ஆகியவற்றிற்குப் புதுக்குளம், மாங்குடி என்ற இரண்டு ஊர்களையும் கொடையாக அளித்த விபரத்தை இச்செப்பேடு கூறுகிறது. இரண்டு தானக் கிராமங்களுக்கும் விரிவான எல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கொடைகள் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சடையப்பத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
14 Files
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
-
TVA_CPS_00172_புதுக்க...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 130 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |