Back
செப்பேடு
சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சிந்துமேட்டுப்பட்டி
ஊர் சிந்துமேட்டுப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 19.5.1654
அளவுகள் / பரிமாணங்கள் 22.5 செ.மீ நீளம், 13 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கரின் அரண்மனைக் காவலரான அரங்கயசாமி நாயக்கன் என்பவன் திருமலை மன்னர் வேட்டைக்குச் சென்றபோது உடன் சென்றான். ஒரு புலி வாலை முறுக்கிக் கொண்டு வருவதைக் கண்டு அரசரை யாதேனும் செய்து விடக்கூடும் என்றஞ்சி கல்வெடியால் இரண்டு குண்டுகள் போட்டு புலியைச் சுட்டு வீழ்த்தினான். அவனை பாராட்டிய திருமலை நாயக்கர் ஒரு ஆபரணத்தை அவ்விடத்திலேயே பரிசளித்து முகாம் இருந்த இடத்தில் அவருக்குச் சாப்பாடு போட்டுப் பாராட்டி அரண்மனை வந்து அவன் விருப்பத்திற்கிணங்க அவனது கிராமமான வாகைக்குளத்துக்கு நாட்டாண்மை முதன்மை வழங்கிச் செப்பேடும் அளித்துள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00004_சிந்தும...

  • TVA_CPS_00004_சிந்தும...

  • TVA_CPS_00004_சிந்தும...

  • TVA_CPS_00004_சிந்தும...

  • TVA_CPS_00004_சிந்தும...

  • TVA_CPS_00004_சிந்தும...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Sep 2017
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு