செப்பேடு
திருமானூர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமானூர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருமானூர் அருள்மிகு கைலாசநாதர் கோயில் |
| ஊர் | திருமானூர் |
| வட்டம் | அரியலூர் |
| மாவட்டம் | அரியலூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | மழவராயர் / ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1790 |
|
விளக்கம்
திருமானல்லூர் சேத்திரத்தில் உள்ள ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி குாயிலுக்கு ஸ்ரீவிசைய ஒப்பிலாத மழவராயர் குமாரர் ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர், திருமாநல்லூரில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலத்தை வேதம் வல்ல பிராமணர்க்கு கொடையாகக் கொடுத்துள்ளார். இந்நிலத்தில் கிடைக்கும் வருவாயில் 100 பூவராகன் (பணம்) அரசிற்குச் செலுத்திவிட்டு மிகுதியைக் கொண்டு கோயிலில் அபிஷேகம், நேய்வேதனம், திருவிளக்கு, திருமாலை முதலிய வழிபாட்டுச் செலவுகள் செய்திட செய்துள்ளார். இச்செப்பேட்டில் நிலத்தில் எல்லைகள் சொல்லப்படுவதுடன், திருமாநல்லூரின் எல்லைகளும் சொல்லப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 73 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |