திருமுருகன்பூண்டிச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமுருகன்பூண்டிச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருமுருகன்பூண்டி |
| ஊர் | திருமுருகன்பூண்டி |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| அளவுகள் / பரிமாணங்கள் | 46.5 செ.மீ. நீளம், 29 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
ஆண்ட சுப்ரமணிய பட்டர் என்பவரை அடக்கமுடையார்கள் என்ற பனைமரம் ஏறுவோர் தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டதையும், அவர் தங்கள் குலத்தவரிடையேற்படும் வழக்குகளைத் தீர்த்து, தண்டனை வழங்க வல்லவர் என்று ஒப்புக் கொண்டதையும், அவருக்குக் குரு காணிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் குடி ஒன்றுக்கு ஐந்து பணமும் ஒரு தரகு கருப்பு கட்டியும் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும் இச்செப்பேடு குறிக்கிறது. இவர்களது குலதெய்வம் புடவாத்தாள். நாடாச்சியம்மை என்றும் குறிக்கப்படுகின்றது. இவர்கள் பரமசிவனால் ஏழு கன்னிகளிடம் உண்டான எழுவரில் மூவரான அடக்கமுடையார் பிரிவினர் என்றும், அடக்கமுடையார் தேவலோகத்தில் பூவெடுத்துப் பால் காவடி கொண்டு சிவனை வழிபட்டவர்கள் என்றும், பேச்சி, நீலி முதலிய பேய்களிடம் சபலம் கொண்டதால் பூலோகத்தில் பனைமரமேறிகளாக மாறினர் என்றும் இவர்கள் தோற்றம் விளக்கப்படுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
19 Files
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
-
TVA_CPS_00025_திருமுர...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 117 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |