Back
செப்பேடு
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 20.3.1699
அளவுகள் / பரிமாணங்கள் 28 செ.மீ x 20.5 செ.மீ
விளக்கம்

        திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர், மன்னார் முத்துச் சலாபத்தில் ஐந்துகல் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையை நல்குவது இந்தச் செப்பேடு.

         இதன் மூலம் திருக்கோயில் திருப்பணி அன்றாடக் கோயில் பூஜைகள், விழாக்கள் ஆகியவைகளுக்கு விளை நிலங்களையும், ஊர்களையும் தானமாக வழங்குதல் என்ற அறப்பணிகளுடன் அமையாமல் தங்களது பாரம்பரிய உரிமையினையும் திருக்கோயில்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பதை இச்செப்பேட்டின் மூலம் அறியமுடிகிறது.

        இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட ஆண்டு கி.பி. 1797-இல் மன்னார் பகுதியில் முத்துச்சாலபம் நடைபெற்றுள்ளது. மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருநாள் அன்று பெருமாளுக்கு திருத்தேர்விழா நடைபெற்று வந்ததையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 34-1.jpg

  • 34-2.jpg

  • 34-3.jpg

  • 34-4.jpg

  • 34-5.jpg

  • 34-6.jpg

  • 34-7.jpg

  • 34-8.jpg

  • 34-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 96
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு