Back
செப்பேடு
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 25.5.1678
அளவுகள் / பரிமாணங்கள் 27 செ.மீ x 26 செ.மீ
விளக்கம்

          திருஉத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி திருக்கோயிலுக்கு திருவிடையாட்ட காணியாக திருஉத்திர கோசமங்கை முதலிய ஊர்களை கொடையாக வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது.

          அதுவரை அந்தக் கிராமங்களிலிருந்து சேதுபதி மன்னருக்குக் கிடைத்து வந்த மடத்து வரி, உசாடி வரி, ஆயம், சுங்கம், கூரை வரி, கம்பள வரி, களஞ்சிய வரி, வலங்கை வரி, எழுத்தாணி வரி, கீதாரம், நன்மாடு சோபிக்காத வரி, கலவை ஈழம், புஞ்சை வரி, மனோன்பிக்கிடாய் வரி, கொல்லர் தச்சர் வரி, திருகை வரி, பாசி வரி, சாணார் வரி, பனங்கடமை, தறிக்கடமை பலப்பட்டடை வரி ஆகிய வருவாய் அனைத்தும் அந்தக் கோயிலுக்கே சேருமாறு இந்தப் பட்டயத்தை சர்வமானியமாக மன்னர் வழங்கியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • 23-1.jpg

  • 23-2.jpg

  • 23-3.jpg

  • 23-4.jpg

  • 23-5.jpg

  • 23-6.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு