மதுரை ஆரப்பாளையம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | மதுரை ஆரப்பாளையம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | மதுரை ஆரப்பாளையம் இராமலிங்க சுவாமிகள் மடாலயம் |
| ஊர் | மதுரை |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / நாவணப்ப நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1760 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 32 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
இச்செப்பேடு மதுராபுரி முதலான 56 தேசத்தாரும் ருத்திரப்பச் செட்டியார், அழகப்ப செட்டியார், குமரன் சின்ன முத்தழகிரி செட்டி, பெரிய முத்தழகிரி செட்டி, வெங்கிடாத்திரி செட்டியார் ஆகிய உறவின் முறையாரும் மதுரையில் உள்ள குசவரில் சகல உறவின் முறையாரும் சேர்ந்து எழுதிய தீர்மானமாகும். திருப்பரங்குன்றத்தில் திருப்பணி முடியும் நிலையில் இருந்த போது தங்களுக்கான வரி வருவாய்களைத் திருப்பணிக்கு கொடுப்பதன்றும், மண்ப வரியாக ஒரு மண்பாண்டம் செய்யும் சக்கரத்துக்கு 5 பணம் வீதம் கொடுப்பதென்றும் முடிவு இதனை இப்பட்டயமாக எழுதியுள்ளனர். பட்டய வாசகர் மதுரைக் கோயில் கணக்கரால் சொல்லப்பட்டு மங்கை பாக ஆசாரியால் பொறிக்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2012
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 135 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |