Back
செப்பேடு
வாழைக்குறிச்சி செப்பேடு
செப்பேட்டின் பெயர் வாழைக்குறிச்சி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் வாழைக்குறிச்சி
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், தெலுங்கு, கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார்
வரலாற்று ஆண்டு 21.2.1763
அளவுகள் / பரிமாணங்கள் 25 செ.மீ x 20.5 செ.மீ
விளக்கம்

          21.2.1763 அன்று புதுக்கோட்டை அரசர் விசைய ரகுநாத ராயர் தொண்டைமான் மன்னர் தருமபுரம் சிவஞான சம்மந்த தேசிகர் சீடரான திருப்பனந்தாள் காசிவாசி குமரகுருபரத் தம்பிரான் அவர்கள் வசம் காசியில் அன்னதானக் கட்டளைக்காக வாழைக்குறிச்சி என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

          வாழைக்குறிச்சியின் எல்லைகளாகப் பனையூர் வடக்குக் குளம் தெற்குக்குளத்து உள்வாய், குழிபிறை வாகைவயல், கொவ்வனூர் புதுவயல், நெல்வேலி விஷமூலிகை வயல், கொத்திவயல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. திருப்பனந்தாள் காசிமடத்தினர் என்றென்றும் சீஷ பரம்பரையாக இவ்வூரை அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இச்செப்பேட்டை பழனியப்ப வாத்தியார் என்பவர் எழுதியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வாழைக்குறிச்சி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

  • TVA_CPS_00177_வாழைக்க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 120
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு