செப்பேடு
பறங்கிப்பேட்டை உலாந்தாக் கம்பெனிச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பறங்கிப்பேட்டை உலாந்தாக் கம்பெனிச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | பறங்கிப்பேட்டை |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | பறங்கிப்பேட்டை மக்கள் / பறங்கிப்பேட்டை உலாந்தாக் கம்பெனி, பறங்கிப்பேட்டை வணிகர்கள் |
| வரலாற்று ஆண்டு | 31.12.1747 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 37 செ.மீ x 25 செ.மீ |
|
விளக்கம்
சண்முகத் தம்பிரான் அவர்கள் தில்லையில் ஆயிரக்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளை மேற்கொண்டார். பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்து ஆலந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனி வியாபாரிகள் சண்முகத் தம்பிரானின் தில்லைத் திருப்பணிக்குத் தாங்கள் விற்கும் பொருளில் ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாக நிர்ணயம் செய்து தங்கள் கம்பெனி உள்ளவரை அளிப்பதாக உறுதி கூறியுள்ளனர். இச்செப்பேட்டின் இறுதியில் நயினியப்ப முதலியார், சிவானந்தம், முத்தய்யன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இச்செப்பேடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 147 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |