Back
செப்பேடு
வெள்ளிக்குறிச்சி செப்பேடு
செப்பேட்டின் பெயர் வெள்ளிக்குறிச்சி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் வெள்ளிக்குறிச்சி
ஊர் வெள்ளிக்குறிச்சி
வட்டம் திருப்புவனம்
மாவட்டம் சிவகங்கை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / கிழவன் சேதுபதி, கூத்தன் சேதுபதி, ரகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1620
அளவுகள் / பரிமாணங்கள் 35 செ.மீ. நீளம், 38 செ.மீ. அகலம்
விளக்கம்

சேதுபதி சீமையான பழைய இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளில் உள்ள 69 ஊர்களும், இவ்வூர்களின் பிரதிநிதிகளாக ஒவ்வொருவர் பெயரும் சொல்லப்பட்டு இவர்கள் அனைவரும் இணைந்து ஒப்பந்தமுறி எழுதியதாக இச்செப்பேடு குறிக்கிறது. இப்பிரதிநிதிகளின் பெயர்களில் ஆண்டி, பண்டாரம், புலவர் ஆகிய பின்னொட்டுச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இச்செப்பேடு பண்டாரம் உறவின் முறையினர் தங்களுக்குள்ளான திருமண நெறிமுறைகள், திருமண முறிவு நெறிமுறைகள் குறித்து எழுதிய தீர்மானமாகும். கணவன் மனைவியின் இடையே ஏற்படும் பிணக்குகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டுள்ளன. திருமண முறிவுகள் நிகழ்ந்தாலும், திருமணங்கள் நிகழ்ந்தாலும் அவர்களது சமூகத்திலிருந்து வேறுபட்ட பிறிதொரு சமூகத்தினர கலந்து விடாமல் இருந்திட எடுக்கப்பட்ட கவனமான தீர்மானமாக இத்தீர்மானம் காணப்படுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வெள்ளிக்குறிச்சி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    17 Files

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

  • TVA_CPS_00041_வெள்ளிக...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 241
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு