திருவிந்தளூர் செப்பேடுகள்
திருவிந்தளூர் செப்பேடுகள்
| செப்பேட்டின் பெயர் | திருவிந்தளூர் செப்பேடுகள் |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | கழுகாணி முட்டம்-கைலாசநாதர் கோயில் |
| ஊர் | திருஇந்தளூர் |
| வட்டம் | மயிலாடுதுறை |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சோழர் / இரண்டாம் ராஜேந்திர சோழன் |
| ஆட்சி ஆண்டு | 4 |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1058 |
|
விளக்கம்
இதுவரை கிடைத்த செப்பேடுகளில் மிக அதிக எடை கொண்ட செப்பேடு இது. இதன் எடை 150 கிலோ. இச்செப்பேட்டில் மொத்தம் உள்ள வரிகள் 3442 ஆகும். இந்தச் செப்பேட்டில் இரு நிலதானங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதலாம் இராசாதிராசன் அளித்த நிலக்கொடையாகும். இம்மன்னனின் 35-வது ஆட்சியாண்டில் 10 ஊர்களை தானமாக வழங்கினான். 311 வேலி விளைநிலம், 9 வேலி மாந்தோப்பு என மொத்தம் 320 வேலி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது கொடையாக இரண்டாம் ராசேந்திரன் 32 கிராமங்களை ஒன்றிணைத்து தனது பெயரிலேயே அகர பிரம்மதேய ராஜேந்திர சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு வேதங்களில் சிறந்த 730 சதுர்வேதி பட்டர்களுக்கு நிலதானம் வழங்கியுள்ளான். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
1. திருஇந்தளூர் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை-600 008. |
|
திருவிந்தளூர் செப்பேடுகள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 09 Oct 2018 |
| பார்வைகள் | 461 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 8 |