தேவநாதபுரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தேவநாதபுரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | தேவநாதபுரம் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | வடமொழி-மராத்தி |
| அரசு/ஆட்சியாளர் | மராட்டியர் |
| வரலாற்று ஆண்டு | 18.1.1654 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 27 செ.மீ X 13 செ.மீ |
|
விளக்கம்
நீள் சதுர வடிவில் அமைந்துள்ள இச்செப்பேடு எவ்வித வேலைப்பாடும் இன்றிக் காணப்படுகிறது. கைப்பிடி போன்ற தனியான பகுதி எதுவுமில்லை. இதில் விக்கிரம சக ஆண்டு கணக்கிடப் பெற்றுள்ளது (விக்கிரம ஆண்டு 1710) கிபி 1811654 இல் இச்செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி 1653 ஆம் ஆண்டிலேயே பீசப்பூர் சுல்தானின் படைத்தளபதி முல்லா முகமதுவுடன் சேர்ந்து கொண்டு தஞ்சை முதல் மராட்டிய மன்னன் முதலாம் ஏகோசியின் தந்தை சாசி சோழநாட்டின்மீது படை எடுத்துள்ளார். அவருடன் மராட்டிய மாவீரர்களும், மக்களும் தமிழகத்தின் பல பகுதிகட்கும், சோழநாட்டுப் பகுதிகட்கும் வந்துள்ளனர். தஞ்சை மராட்டிய ஆட்சி நிறுவப்படுவதற்கு முற்பட்ட சில மராத்தி மொழிக் கல்வெட்டுக்கள், தென்ஆர்க்காடு, வட ஆர்க்காடு மாவட்டத்தில் கிடைக்கின்றன. விநாயகருக்கு வணக்கம் கூறி இச்செப்பேடு தொடங்குகிறது. கி.பி 1654 ஆம் ஆண்டு மோடா ஹாதி யவனி சதனா சாகுவின் பேரனும், சூரசிசாகுவின் மகனும் ஆகிய வீரசி சாகுநாத் என்பவரால் தேவநாதபுரத்திற்கு நடுவில் நிலம் வாங்கப்பட்டுக் கட்டப் பெற்ற 14 வீடுகளில் மோடஹாதீய திரிவேதி விட்டல துவிவேதியின் பேரனும், ஜக்ருண துவிவேதியின் மகனும் ஆகிய பிரபாகர துவிவேதிக்கு ஒரு வீடு கொடையாகக் கொடுக்கப்பட்டது. அந்தணராகிய அவருக்கு வீட்டுடன் பசு, படுக்கை, சமையல் பாத்திரங்கள், தானியம், குடை காலணிகள் ஆகியவைகளும் கொடுக்கப்பெற்றன. இச்செப்பேடு தேவாஜி பண்டிதர் மகன் ஆவுஜி பண்டித வைத்தியரால் எழுதப் பெற்றது. இறுதியில் தொடர்புடையவர்களின் கையொப்பங்கள் மோடி எழுத்துக்களில் காணப்படுகின்றன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 92 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |