முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சிந்துரெட்டியார் மடம் |
| ஊர் | நத்தக்காடு |
| வட்டம் | அருப்புக்கோட்டை |
| மாவட்டம் | விருதுநகர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்து விஜய ரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1756 |
|
விளக்கம்
நத்தக்காடு கிராமத்திலுள்ள சித்துரெட்டியார் மடத்துக்கு வேப்பங்குளம் கிராமத்தைச் சர்வமானியமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு உறுதி செய்கிறது. இதனை வழங்கிய கால மாகிய கி. பி. 1756ல் சேது நாட்டை ஆட்சி செய்தவர், முத்துக் குமார விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். ஆனால் இந்தச் செப் பேடு அவரால் வழங்கப் படவில்லை. அவரது மருகர் தனுக் கோடி ராமுத்தேவர் என்பவர் இதனை வழங்கியுள்ளார். மன் னருக்குப் பதிலாக எந்தச் சூழ்நிலையில் இந்த தானத்தை அவர் வழங்கி உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. சேதுபதி ஆட்சியில் சேதுபதிகளைப்போல அரசவழியினரும் அரசு அலுவலர்களும் இத்தகையச் செப்பேடுகள் வழங்கியதை இதன் மூலம் அறியமுடிகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 117 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |