வழிபாட்டுத் தலம்
குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | மலைக்கோயில் |
| ஊர் | குன்னமலை |
| வட்டம் | பரமத்தி வேலூர் |
| மாவட்டம் | நாமக்கல் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஸ்ரீவல்லீசுவரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் அமர்ந்த நிலையில நந்தி உள்ளது. முக மண்டபத்தில் உள்ள தூண்களில் தாமரைப்பதக்கம், நர்த்தன கணபதி ஆகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. கருவறை விமானத்தின் பூமிதேசப் பகுதியில் யாளி வரிசை காட்டப்பட்டுள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு கற்றளி. |
|
சுருக்கம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் குன்னமலை ஊராட்சியைச் சேர்ந்த குன்னமலையில் அமைந்துள்ள இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. புனரமைப்புப் பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ள இக்கோயில் கற்றளியாக காட்சியளிக்கிறது.
|
|
குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இக்கோயில் விளங்குகிறது. கருவறை விமானத்தின் தளப்பகுதி சிதைந்து விட்டது. பூமிதேசப்பகுதியோடு காட்சியளிக்கிறது. இக்கோயில் முழுவதும் கற்றளியாக இருந்திருக்க வேண்டும். சதுர வடிவ சிறிய கருவறை. தொடர்ந்த அர்த்தமண்டபம் தென்வடலாக காட்சியளிக்கிறது. அதனையடுத்து முகமண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. விமானத்தின் வெளிப்புறச் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்கள் சிற்பங்கள் ஏதுமின்றி அரைத்தூண்களுடன் விளங்குகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பாண்டிக் கொடுமுடி, பரமத்தி வேலூர் சிவன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பெருந்துறை |
| செல்லும் வழி | பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஊர் குன்னமலை. இங்கு உள்ள சிறுமலையில் அழகிய சிவன் கோயில் உள்ளது . |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
9 Files
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
-
TVA_TEM_000245/TVA_TEM_000245_க...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Mar 2019 |
| பார்வைகள் | 109 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |