வழிபாட்டுத் தலம்
இராயபுரம் ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிப் தர்கா
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | இராயபுரம் ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிப் தர்கா |
|---|---|
| ஊர் | தண்டையார்பேட்டை |
| வட்டம் | ராயபுரம் |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.1838 |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 182 ஆண்டுகள் பழமையானது. இந்துக்களும் வழிபடும் தர்கா. |
|
சுருக்கம்
பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவர் ஆவார். குணங்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகில் அமைந்துள்ள குணங்குடி அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் "தொண்டி ஆவர் நாயகன்" என்ற பொருள் பட, அவரை "தொண்டியார்" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் ராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர்.
|
|
இராயபுரம் ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிப் தர்கா
| கோயிலின் அமைப்பு | தர்காவின் மையப்பகுதியில் குணங்குடி மஸ்தான் சாகிபின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதி காணப்படுகின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இராயபுரம் தர்கா கமிட்டி |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பட்டினத்தார் சமாதி |
| செல்லும் வழி | சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும் வடசென்னைப்பகுதிகளுள் ஒன்றான இராயபுரத்தில் இந்த தர்கா அமைந்துள்ளது. இராயபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிச்சாண்டி சந்து என்று கேட்டு சென்றால் குணங்குடி மஸ்தான் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 586 |
| பிடித்தவை | 0 |