Back
வழிபாட்டுத் தலம்
நாண்மதியப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் நாண்மதியப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருத்தலைச்சங்க நாண்மதியம்
ஊர் திருத்தலைச்சங்காடு
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நாண்மதியப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் தலைச்சங்க நாச்சியார்
திருக்குளம் / ஆறு சந்திர புஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மன், முதலாம் ராசராசன், முதலாம் இராசேந்திரன், ஆகிய சோழ மன்னவர்கள் இத்தலத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. திருக்கோட்டியூர் பெண்ணொருத்தி இக்கோவிலுக்குச் செய்த நிலதானத்தைப் பற்றி வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மனான இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது. இவனாட்சியின் 12ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு கொல்லம் என்னும் ஊரைச் சேர்ந்த வணிகன் இக்கோவிலுக்குச் செய்த விளக்கு தானத்தைப் பற்றிக் கூறுகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார், உற்சவர் வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாசமரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று சுட்டினர். தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும் சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும் பெயர் ஊருக்கு வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இது ஒன்றுதான். திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பில் இட்ட பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். பெரிய திருமடலிலும் (2674 இல் 134) இத்தலத்தை திருமங்கை மீளவும் மங்களாசாசனம் செய்கிறார். கதிர்மதியம் என்று ஆண்டாள் திருப்பாவையில் கூறியுள்ளதையும் இப்பெருமானுக்கிட்ட மங்களாசாசனமாகக் கொள்ளலாம்.
நாண்மதியப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சீர்காழி தோணியப்பர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில், தலைச்சங்காடு சிவன் கோயில்
செல்லும் வழி சீர்காழிக்கு தென்கிழக்கே சுமார் 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் போய் அங்கிருந்து சீர்காழி செல்லும் பாதையில் 2 மைல் தூரம் சென்று இத்தலத்தை அடையலாம். தற்போது ஆக்கூரிலிருந்து இவ்வழியாகப் பல பேருந்துகள் செல்கின்றன. சீர்காழியிலிருந்தும் தற்போது பேருந்து வழிகள் உண்டு. பேருந்துகள் செல்லும் சாலையில் இத்தலத்தின் பெயர் எழுதப்பட்டுள்ள இடத்திலிருந்து இறங்கி சுமார் 2 பர்லாங் தூரம் சென்று இத்தலத்தை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
நாண்மதியப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தலைச்சங்காடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 31
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்