வழிபாட்டுத் தலம்
அன்னதான கருப்புசாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அன்னதான கருப்புசாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கருப்பசாமி கோயில் |
| ஊர் | அரசப்பன்பட்டி |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | அரசப்பன் பட்டி குளம் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | அன்னதான கருப்பசாமி நின்றநிலையில் முறுக்கிய மீசையுடன் கையில் அரிவாளுடன் காட்சியளிக்கிறார். கருவறையின் வெளியே இருபுறமும் இரு நாய்கள் காட்டப்பட்டுள்ளன. நாய்கள் கருப்பசாமியின் பரிவாரங்களாகும். சிவனுக்கு தனியே சந்நிதி உள்ளது. சிவன் இலிங்க வடிவில் உள்ளார். நந்தி சிற்பம் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | அன்னதானத்திற்கு புகழ்பெற்ற கோயில். |
|
சுருக்கம்
அன்னதான கருப்பசாமி வழிபாடு பக்தர்களுக்கு எப்பொழுதும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபடப்பெறும் நெறியாகும். அன்னதான கருப்பசாமி கோயிலில் கருப்பசாமிக்கு உரிய பூசாரி நீண்ட அரிவாளின் மீது நின்று தன்னுடைய இரத்தத்தை காணிக்கையாக்குகிறார். இக்கருப்பசாமி கோயிலில் சிவனுக்கு தனி சந்நிதியும் அமைந்துள்ளது.
|
|
அன்னதான கருப்புசாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | அன்னதான கருப்பசாமி கோயிலில் சிவனுக்கு தனி சந்நிதியும், கருப்பசாமிக்கு தனி சந்நிதியும் அமைந்துள்ளன. சிவன் கருவறையில் இலிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறையின் முன்னே நந்தி வாகனம் காட்டப்பட்டுள்ளது. கருப்பசாமியின் கருவறை படிக்கட்டுகளுடன் கூடியதாக அமைந்துள்ளது. கருப்பசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கூந்தப்பனை அய்யனார் கோயில், ஏழுவீட்டுக்காரி அம்மன் கோயில் |
| செல்லும் வழி | மேலூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து அரசப்பன் பட்டிக்கு பேருந்துகள் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 454 |
| பிடித்தவை | 0 |