Back
வழிபாட்டுத் தலம்
வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில்
வேறு பெயர்கள் கருப்பணசாமி கோயில்
ஊர் வண்டியூர்
வட்டம் மதுரை
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு வண்டியூர் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் வண்டியூரில் உள்ள சமய கருப்பணசாமி கோயில் கருவறையில் கருப்பசாமி நாகதேவதையாக பெண்தெய்வமும் வழிபடப்பெறுகின்றனர். மூலவர்களின் இருபுறமும் விநாயகர் மற்றும் அம்மன் சுதைச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கோயில் வளாகத்தின் மையத்தில் சமய கருப்பணசாமியின் மிகப்பெரிய சுதைச்சிற்பம் காணப்படுகின்றது. பாய்ந்து செல்லும் வெண்குதிரையில் கருப்பணசாமி வீராவேசமாக அமர்ந்துள்ளார். கருப்பர் முறுக்கிய மீசையுடன் கையில் அரிவாளுடன் உள்ளார். குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதகணத்தாரின் தலையில் வைக்கப்பட்டுள்ளன. குதிரையின் பக்கவாட்டில் கருப்பரைப் போற்றும் வீரர்களும் அவரது துணைவியர்களும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் வீச்சரிவாள் ஏந்தி நின்ற நிலையில் உள்ள மற்றுமொரு கருப்பசாமியும் இங்கு காணப்படுகிறார்.
தலத்தின் சிறப்பு வண்டியூர் கருப்பசாமி அழகுமலையான் அழகர் கோயிலிருந்து சித்திரை பௌர்ணமிக்கு மதுரை வரும் பொழுது எதிர்சேவை கொள்ளும் தலங்களுள் ஒன்று.
சுருக்கம்
மதுரை பாண்டி முனீசுவரர் கோயிலின் உபதெய்வமாக சமய கருப்பசாமியை வழிபடுகின்றனர். ஒரு முறை, வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர் ஒருவர் இக்கோயிலில் உள்ள சமய கருப்பசாமியிடம் வந்து, தான் இன்றைக்கு எத்தனை மிருகங்களை வேட்டையாடப் போகின்றேன் என குறி கேட்டுள்ளார். அதற்கு சமய கருப்பசாமியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதேபோல், அந்த ஆங்கிலேயரும் அன்று ஒரு மிருகத்தைக்கூட வேட்டையாட முடியவில்லை. அதே கோபத்தில், சாமியின் கரம் மற்றும் சிரத்தை துண்டித்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றி காணப்படுகின்றார்.
வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு பல சிற்பங்களுடன் வழிபாட்டில் உள்ளது. கருப்பணசாமியின் கருவறை முழுவதும் செங்கல் தளியாகவே காட்சியளிக்கிறது. கருவறையின் விமானம் ஒற்றைத் தளத்தைக் கொண்டு விளங்குகிறது. கருவறை நீள்சதுர வடிவில் உள்ளது. கருவறையில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள பீடத்தின் மீது கருப்பணசாமி, நாகம்மாள், விநாயகர், அம்மன் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கோயில் வளாகத்தில் குதிரை மேல் செல்லும் கருப்பரின் பெரிய சுதைச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வண்டியூர் மாரியம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், காலபைரவர் கோயில், சிவன் கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வண்டியூருக்கு பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் வண்டியூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் எம்.மூர்த்தி, எஸ்.எஸ்.கணேஷ், சமயராஜா, தனியரசு ராஜூபிள்ளை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 54
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்