வழிபாட்டுத் தலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு கைலாசநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திடியன் மலை சிவன் கோயில் |
| ஊர் | திடியன் மலை (உசிலம்பட்டி) |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| தொலைபேசி | +91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கைலாசநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | பெரியநாயகி |
| தலமரம் | நெய்கொட்டா மரம் |
| திருக்குளம் / ஆறு | பொற்றாமரைக்குளம் |
| வழிபாடு | இருகால பூசை |
| திருவிழாக்கள் | பௌர்ணமி கிரிவலம், கார்த்திகையில் மகாதீபம், சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, மாசிமகம் |
| காலம் / ஆட்சியாளர் | நாயக்க மன்னர்கள் / கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் தூண் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தூண் கல்வெட்டொன்று, இந்த தூண் அம்பட்டயம்பட்டியிலிருக்கும் பெரிய திம்மன் நல்லு மகன் பெரியண தேவன் மக்கள் ஆறு பேற் உபயம் இந்த உருப்படி பெரியண தேவன் என்று கூறுகிறது. அதாவது தூணில் உள்ள உருவம் பெரியண தேவன் என்பதாக உள்ளது. மற்றொரு கல்வெட்டு மேற்படி ஆறுபேரும் தூண் உபயத்தை செய்ததாகத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு அதே ஊரிலிருக்கும் பெ.பெரியகருப்பத் தேவன் மகன் நல்லு பெருமாத்தேவன் என்பவனின் பெண்சாதி கட்டகிடா மீனாட்சியின் மக்கள் நாலும் உபயம் செய்த உருவமாக நல்ல பெருமாள் தேவனைச் சுட்டுகிறது. மற்றுமொரு தூண் கல்வெட்டு உச்சப்பட்டி கருப்பத்தேவன் மகன் வெள்ளை வெங்கித் தேவன் மக்கள் ஏழு பேரும் அவன் உருவம் பொறித்த தூணை செய்வித்ததைத் தெரிவிக்கிறது. மற்றுமொரு கல்வெட்டு சிந்துபட்டி வகையறாவைச் சேர்ந்த அம்மையப்ப முதலியாரின் குமாரன் சோமசுந்தர முதலியாரைக் குறிப்பிடுகிறது. திடியன் வகையறா அஞ்சு கிராமங்கள் கணக்கு சந்திரசேகரற முதலியார் குமாரன் முத்தியப்ப முதலியார் என்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகின்றது. உருவம் பொறித்த தூணில் உள்ள மற்றொரு கல்வெட்டு சோமசுந்தர முதலியார் குமாரன் வெங்கிடாசல முதலியார் என்கிறது. மேலும் முத்தியப்ப முதலியான் குமாரரான தாண்டவராய முதலியார், பாண்டி முதலியார் குமாரன் முத்திருளப்ப முதலியார், கோவிந்த நாயக்கர், காத்த நாயக்கர் ஆகியோர் இக்கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் மற்றும் மண்டப வெளிப்புற கோட்டத்தில் துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. கருவறையில் கைலாசநாதர் இலிங்க உருவில் காட்சியளிக்கிறார். அம்மன் தனி திருமுன்னில் (சந்நிதி) காட்டப்பட்டுள்ளார். கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் உள்ள கொடுங்கையில் காணப்படும் கூடுமுகங்களில் கண்ணப்பர், பசுபதி, உமாமகேசுவரர், இலிங்க வழிபாடு ஆகிய சிறிய வடிவ புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. தல விநாயகர் மிகப் பெரிய வடிவில் அமர்ந்த நிலையில் உள்ளார். கன்னிமூலை கணபதி, முருகன் ஆகிய சிற்பங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் தளங்களில் சிவன், பெருமாள், கிருஷ்ணர், நான்முகன் மற்றும் அடியார்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கால கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. |
|
சுருக்கம்
திடியன்மலை தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் அடிவாரத்திலுள்ள கைலாசநாதர் கோயில் தற்போது நாயக்கர் கால கலைப்பாணியில் அமைந்துள்ளது. இருப்பினும் பாண்டியர் காலத்திய கோயிலாய் இருந்து நாயக்க மன்னர்களால் புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலில் தூண்களில் நான்கு மற்றும் ஐந்து வரி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தூண் சிற்பத்தை குறிப்பிடுவதாக இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்ற கட்டுமான அமைப்பைப் பெற்று விளங்குகின்றது. அம்மன் திருமுன் (சந்நிதி) தனித்து உள்ளது. கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் சிற்பங்களாக உள்ளன.
|
|
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | திடியன் மலை கைலாசநாதர் கோயில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இக்கோயில் பரந்த பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் கருவறை விமானம் இரண்டு தளங்களை உடையதாக அமைந்துள்ளது. திராவிட பாணி கட்டடக் கலையைப் பெற்றுள்ளது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், தளங்களும், விமான மேற்பரப்பும் சுதை வண்ணமாகவும் அமைந்துள்ளது. விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுடன் கூடிய தேவ கோட்டங்களில் இறையுருவங்கள் உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, அம்மன் திருமுன், சண்டேசர், விநாயகர் ஆகியோருக்கான சிறுகோயில் உள்ளிட்ட கட்டுமான அமைப்பினைப் பெற்று விளங்குகின்றது. கருவறைத் திருச்சுற்றினை ஒட்டி நாற்புறமும் பெரிய மதிற்சுவர் செல்கிறது. கோபுரம் அமைக்கப்படவில்லை. அலங்கரிக்கப்பட்ட முகப்பு அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, தேனி-அல்லி நகரம் |
| செல்லும் வழி | மதுரையில் இருந்து 33கி.மீ. தொலைவில் திடியன் மலை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. உசிலம்பட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 10.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 09 Jun 2017 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |