வழிபாட்டுத் தலம்
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வேற்காடு, வெள்வேலங்காடு |
| ஊர் | திருவேற்காடு |
| வட்டம் | ஆவடி |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| தொலைபேசி | 044-26800880, 26800430 |
| உட்பிரிவு | 3 |
| மூலவர் பெயர் | தேவி கருமாரி அம்மன் |
| தாயார் / அம்மன் பெயர் | கருமாரி அம்மன் |
| தலமரம் | கருவேல மரம், வேம்பு |
| திருக்குளம் / ஆறு | வேலாயுத தீர்த்தம் |
| ஆகமம் | காமிகம் |
| வழிபாடு | ஆறு கால பூசை |
| திருவிழாக்கள் | சித்ரா பௌர்ணமி, ஆடித் திருவிழா (12 வாரங்கள்), பிரம்மோற்சவம், தைப்பூசம், மாசிமகம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் அம்மை பிறைச்சந்திரன், மூவிலைச்சூலம், உடுக்கை, வாள், பொற்கிண்ணம் ஏந்தி சிவக்கோலம் பூண்டுள்ளாள். |
| தலத்தின் சிறப்பு | தேவாரப் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். |
|
சுருக்கம்
திருவேற்காட்டில் கருமாரி அம்மன் காட்சியளித்தார். முதன் முதலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அன்னை கருமாரி திருச்சாம்பலால் வழிபடுவோரின் வினைபோக்கி அருளாட்சி செய்து வருகிறாள். வேற்கண்ணி அம்மை சூரர்களை மாய்ப்பதற்கு முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்த சக்தி இவள் என்பது புராணம். “க“ என்பது பிரம்மனையும், “ரு“ என்பது ருத்திரனையும், “மா“ என்பது மாலையும் குறிக்கும். முத்தேவர்களின் மூலசக்தி ஈவளே என்பது கருத்து. பஞ்சபூதங்களும் அன்னையை வழிபட்டு வேண்டிக் கொண்டதற்கு இணங்க அப்பஞ்ச பூதங்களை ஐந்து நாகங்களாகத் தன் முடி மேல் கொண்டு கொண்டு திருவருள் பாலித்தவள் கருமாரி.
|
|
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இங்கு சீனிவாசப் பெருமாள் சன்னதி, சப்தமாதாக்கள், பிரத்யங்கரா சன்னதி, துர்க்கை சன்னதி, புற்றடி போன்ற பல சுற்றுச் சன்னதிகள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில், திருமழிசை ஆழ்வார் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் பெருவழிச் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2018 |
| பார்வைகள் | 49 |
| பிடித்தவை | 0 |