Back
வழிபாட்டுத் தலம்
திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் நந்திபுர விண்ணகரம்
ஊர் நந்திபுர விண்ணகரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நாதநாதன், விண்ணகரப் பெருமாள், யோக ஸ்ரீனிவாசன், ஜெகந்நாதன்
தாயார் / அம்மன் பெயர் செண்பகவல்லி
திருக்குளம் / ஆறு நந்தி தீர்த்த புஷ்கரிணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், விசயநகரர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் விண்ணகரப் பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார். செண்பகவல்லித் தாயார் தனி திருமுன்னில் வீற்றிருந்த கோலம். கருடன், அனுமன் போன்ற சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள சிற்பக் கோலம் மிகவும் அழகானதாகும்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். இத்தலம் வானமாமலை ஆதிக்கத்திற்கு உட்பட்டது. ஐப்பசி வெள்ளிக் கிழமையில் இங்கு தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் சர்வகாரிய சித்தியை உண்டு பண்ணுகிறதென்று புராண காலத்திலிருந்து இன்றும் உள்ள நம்பிக்கை. இப்பகுதியின் மண் மிகவும் பிரசித்தமானது. இந்த மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் இந்தப் பகுதிகளில் மிகவும் பெயர் பெற்றவை. மண்பாண்டங்கள் செய்வது இந்தப் பகுதியில் சிறந்த குடிசைத் தொழிலாகவும் விளங்கி வருகிறது. மேலும் இந்த மண் நெல்விளைச்சலில் அமோக விளைவைத் தருகிறது. எனவேதான் மண்ணில் இது போல் நகரில்லையென்று திருமங்கையாழ்வாரும் இந்த மண்ணைப் பற்றிப் பாடினார் போலும். இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இத்திருக்கோயில் விமானம் மந்தார விமானம் என்னும் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றது. நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மண்டபத்தில் விளங்கும் தூண்கள் விசயரங்க சொக்கப்ப நாயக்கர் காலத்தவையாகும்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் உடையாளூர் சிவன் கோயில், பால்குளத்தன் கோயில், பழையாறை சோமேசுவரர் கோயில், பாம்படையூர் பகவதி அம்மன் கோயில், கொருக்கை பிரம்மபுரீசுவரர் கோயில்
செல்லும் வழி இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. நாதன் கோவில் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும் கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2 மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம். வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் நாதன் கோயில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கும்பகோணம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Nov 2018
பார்வைகள் 55
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்