Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
வேறு பெயர்கள் மருகற் பெருமான் நாயனார் கோயில்
ஊர் திருமருகல்
வட்டம் நன்னிலம்
மாவட்டம் திருவாரூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் மாணிக்கவண்ணர், இரத்னகிரீஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி
தலமரம் மருகல் என்னும் ஒருவகை வாழை
திருக்குளம் / ஆறு இலக்குமி தீர்த்தம்
வழிபாடு ஐந்து கால பூசை
திருவிழாக்கள் சித்திரையில் பெருவிழா, இவ்விழாவில் ஆறாம் நாள் திருவிழா விடந்தீர்த்த ஐதீகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டிமகன், செட்டிப் பெண் திருக்கல்யாணமாகவும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் நடராச சபையின் வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதியில் குசகேது மன்னன் வரலாறும், ஞானசம்பந்தர் விடந்தீர்த்த வரலாறும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.
சிற்பங்கள் ‘மடையார் குவளை மலரும் மருகல் உடைய பெருமானாய் மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தி எனப்படுகிறது. கிழக்கு நோக்கியது. எடுப்பான தோற்றம் - சதுர ஆவுடையார். உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்துள்ளன. வெளிச்சுற்றில் சப்தமாதாக்கள், விநாயகர், சௌந்தரநாயகி, மருகலுடையார் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் (யானையேறாப் பெருங்கோயில்களுள்) இதுவும் ஒன்று. பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை, ஞானசம்பந்தர் ‘சடையாய் எனுமால்’ பதிகம் பாடி எழுப்பியருளிய தலம். இவ்வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றில் சேக்கிழார் பெருமான் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். இவ்வரலாற்றுச் சிற்பம் கதையில் இராச கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது.
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. எதிரில் திருக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. கரையில் முத்து விநாயகர் சந்நிதி. வாயில் கடந்து உட்சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில்தான் ஞானசம்பந்தர், விஷந்தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. படிகளேறி முன் மண்டபத்தையடைந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தலப்பதிகக் கல்வெட்டு இடப்பாலுள்ளது. சனி பகவான் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கத்தில் மாணிக்கவண்ணர் சந்நிதி உள்ளது. இருபுறமும் விநாயகரும், செட்டிப் பிள்ளையும், பெண்ணும் உள்ளனர்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், நன்னிலம்
செல்லும் வழி திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள தலம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருமருகல்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தஞ்சாவூர், கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி தஞ்சாவூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 41
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்